Sri Lanka Brodcasting Corporation

Sun09242017

Last updateFri, 22 Sep 2017 8pm

உள்ளூர்

பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் யுத்தத்தின் போதான சம்பவங்களுக்கு அரசாங்கம் பொறுப்புக் கூறுமென அமைச்சர் ராஜித சேனரத்ன கூறுகிறார்.

பயங்கரவாதத்தை தோற்கடித்த யுத்தத்தின்போது நிகழ்ந்த சம்பவங்களுக்கு அரசாங்கம் பொறுப்புக் கூறுமென அமைச்சர் டொக்டர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் முயற்சிகளில் போர் குற்றங்கள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படுமானால், உள்ளுர் பொறிமுறையின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகவுள்ளதென அமைச்சர் கூறினார். அவர் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றினார்.

ஜெனரல் ஜகத் ஜயசூரிய சம்பந்தப்பட்ட விவகாரம் பெரும் பிரச்சினையல்ல். இது ஊடகங்களால் ஊதிப் பெருப்பிக்கப்படும் பிரச்சினையென சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி