Sri Lanka Brodcasting Corporation

Fri06222018

Last updateFri, 22 Jun 2018 1pm

உள்ளூர்

கொழும்பு பாதுகாப்பு மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்.

கொழும்பு பாதுகாப்பு மாநாடு – பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமானது. மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இலங்கை இராணுவம் எட்டாவது தடவையாகவும் இதனை ஒழுங்கு செய்திருக்கிறது. வன்முறை தீவிரவாதத்திற்கு எதிரான பூகோள செயற்பாடு இதன் தொனிப் பொருளாகும். 15 நாடுகளைச் சேர்ந்த 12 பேச்சாளர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள். 800க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைத்தளபதிகள் உட்பட பல பிரமுகர்கள் நிகழ்வில் உரையாற்றினார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த அட்மிரல் வில்லியம் ஜே போலன் நிகழ்வில் அங்குரார்பண உரையாற்றினார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி