Sri Lanka Brodcasting Corporation

Tue08222017

Last updateMon, 21 Aug 2017 8pm

உள்ளூர்

சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை எக்காரணம் கொண்டும் குறைக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை எக்காரணம் கொண்டும் குறைக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். தற்சமயம்
14 லட்சத்து 25 ஆயிரத்து 661 சமுர்த்தி பயனாளிகள் நாட்டில் காணப்படுகின்றனர் என்று அமைச்சர் திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவர்களுக்காக அரசாங்கம் நான்காயிரத்து 200 கோடி ரூபா நிதியை ஒதுக்கியிருந்த போதிலும், செயல்பாட்டு ரீதியில் ஒதுக்கப்பட்ட தொகை ஆயிரத்து 200 கோடி ரூபா மட்டுமே. பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்வியொன்றிற்கு பதிலளித்து பேசுகையில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

சமுர்த்தி பயனாளிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், 85 வீத பயனாளிகளே இயக்கத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி