Sri Lanka Brodcasting Corporation

Mon05282018

Last updateSat, 26 May 2018 1pm

உள்ளூர்

இலங்கையில் மின்சார விநியோகத்துறையில் சிறந்த வலையமைப்பை ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மின்சார விநியோகத்துறையில் சிறந்த வலையமைப்பை ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த செயற்றிட்டத்திற்கு அரசாங்கம் 160 மில்லியன் டொலர் நிதியை செலவிடுகிறது. 2020ஆம் ஆண்டளவில் இந்த செயற்றிட்டத்தை பூர்த்தி செய்ய எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. இந்த செயற்றிட்டத்திற்கு லெகோ (டுநுஊழு) நிறுவனம் 85 கோடி ரூபாவை முதலீடு செய்கிறது. இந்த செயற்றிட்டத்தின் முதலாவது கட்டம் அடுத்த வருடத்தில் பூர்த்தி செய்யப்படும் என்று பிரதி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஆஷூ மாரசிங்க எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்து பேசுகையில் பிரதி அமைச்சர் இந்தத் தகவல்களை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த விடயத்திற்கென விசேடமாக ஸ்மார்ட் வகை மின்மானிகள் தருவிக்கப்படவுள்ளன. இவற்றை தயாரிப்பதற்கு விசேட தொழிற்சாலை ஒன்றும் ஸ்தாபிக்கப்படும். இந்த மின்மானிகள் மூலம் எவ்வாறு மின் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்படும் அதேவேளை, மின்சார பாவனைக்கான அலகுகள் குறித்த நம்பிக்கையையும் பொதுமக்கள் மத்தியில் வெகுவாக கட்டியெழுப்பலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார். அதேவேளை, மின் விநியோக வலையமைப்பு தங்கு தடையின்றி இயங்கக்கூடிய வாய்ப்பும் இதன் மூலம் ஏற்படுகிறது. மேலும், நேர்த்தியான துல்லியமான மின் விநியோக சிட்டைகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி