Sri Lanka Brodcasting Corporation

Mon10232017

Last updateMon, 23 Oct 2017 8am

உள்ளூர்

ஜனாதிபதிக்கு பங்ளாதேஷில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

பங்ளாதேஷிற்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தைமேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு டாக்கா விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்ளாதேஷ் செல்லும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 

பங்ளாதேஷ் ஜனாதிபதி மொஹமட் அப்துல் ஹமீட் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்றார். ஜனாதிபதிக்காக 21 இராணுவ மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.
இலங்கைக்கும் பங்ளாதேஷிற்கும் இடையில் 1972ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இருதரப்பு உறவுகளை உறுதிப்படுத்தி பொருளாதார வர்த்தகத் தொடர்புகளுக்கான புதிய வழிகளை ஏற்படுத்துவது ஜனாதிபதியின் நோக்கமாகும். விவசாயம், கல்வி, வெளியுறவுப் பயிற்சி, குடிவரவு-குடியகல்வு போன்ற துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வது பற்றிக் கவனம் செலுத்தப்படும்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி