Sri Lanka Brodcasting Corporation

Tue06272017

Last updateMon, 26 Jun 2017 10am

உள்ளூர்

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணை மூலம் வெற்றிகரமான பெறுபேறுகள் - பொலிசார் அறிவிப்பு.

 

 

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பதிவான இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பாதிக்கும் சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் வெற்றிகரமான பெறுபேறுகளைப் பெற முடிந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

பாணந்துறை எலுவில் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முக்கிய சந்தேக நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் 30ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் பிரதேசத்தில் சில சம்பவங்கள் தொடர்பில்  இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சம்பவங்களுக்கு பொதுபல சேனா அமைப்பு செயற்பாட்டாளர்கள் தொடர்புபட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

சமூக இணையத்தளங்கள் மூலம் பொதுமக்களைத் தூண்டும் இன மற்றும் மதங்களுக்கு இடையிலான அமைதியற்ற நிலையை ஏற்படுத்தும் நபர்களைப் போன்று மதத் தலைவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் குறிப்புக்களை வெளியீடும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படுமென்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி