Sri Lanka Brodcasting Corporation

Mon05212018

Last updateFri, 18 May 2018 7pm

உள்ளூர்

சந்தையில் அரிசி தட்டுப்பாடு நிலவ முடியாதென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கையிருப்பில் உள்ள அரிசியை பேணுதல், எதிர்கால அரிசித் தேவை என்பன பற்றி ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் கருத்து வெளியிட்டார். சந்தையில் அரிசித் தட்டுப்பாடு நிலவுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. களஞ்சியங்களில் காணப்படும் அரிசி பற்றியும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். போதியளவிலான அரிசியை களஞ்சியங்களில் பேணுவதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். உத்தரவாத விலையை விட கூடுதலான விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதால் நுகர்வோர் எதிர்நோக்கும் நெருக்கடிகள் பற்றியும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி