Sri Lanka Brodcasting Corporation

Wed08232017

Last updateTue, 22 Aug 2017 6pm

உள்ளூர்

வெள்ளத்தினால் சேதமடைந்த பாடசாலைகளும் சிறந்த முறையில் மறுசீரமைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

வெள்ளத்தினால் சேதமடைந்த சகல பாடசாலைகளும், சிறந்த முறையில் மறுசீரமைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிட்பத்தற தெஹிகஸ்பே டட்லில் சேனாநாயக்க கல்லூரிக்கான விஜயத்தின்போது பிரதமர் கருத்து வெளியிட்டார். வெள்ளத்தினால் சேதமடைந்த கணனி உட்பட பாடசாலை உபகரணங்கள் அனைத்தையும் துரிதமாக வழங்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இன, மத பேதமின்றி வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள். இவர்களை தாம் நன்றியுடன் நினைவு கூர்வதாக பிரதமர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட வியாபாரங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு தேவையான உயர்ந்தபட்ச உதவிகளை அரசாங்கம் வழங்க இருக்கிறது. குடிநீர் பிரச்சினைக்கு நீண்டகால மற்றும் குறுங்கால தீர்வுகளை வழங்குவது பற்றியும், பிரதமர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

அரச ஊழியர்கள் தமது உயிரை துச்சமாக மதித்து செயற்பட்டமையினால் வெள்ளத்தினால் ஏற்பட்ட சேதங்களை குறைக்க முடிந்தாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். பாதிக்கப்பட்ட மக்களை மீளக் குடியமர்த்துவதில் காணப்படும் தடைகள் பற்றி கவனம் செலுத்தி உரிய தீர்வுகளை வழங்குமாறு பிரதமர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி