Sri Lanka Brodcasting Corporation

Sat02242018

Last updateSat, 24 Feb 2018 10am

உள்ளூர்

சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக செயற்பட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு தார்மீக உரிமைகள் கிடையாதென பிரதி அமைச்சர் கரு பரணவிதான சுட்டிக்காட்டியுள்ளார்.

சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக தொழி;ற்சங்க நடவடிக்கையில் ஈடுபட அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு எதுவித தார்மீக உரிமையும் கிடையாது என்று பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.

சைட்டம் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட போது இலங்கையின் மருத்துவப் பேரவையும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கொத்தலாவல மருத்துவக் கல்லூரியை ஸ்தாபிக்கவும் அவர்கள் அங்கீகாரம் வழங்கினார்கள். சைட்டம் நெருக்கடிக்கு மாற்று தீர்வு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

சகல தரப்பினருக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் இந்தத் தீர்வு அமைய வேண்டும். இதற்கு மாற்றமாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை தொழிற்சங்க செயற்பாடு அன்றி, அரச எதிர்ப்புச் செயலாகும் என்று பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த சங்கத்திற்கு பெரும்பாலானோரின் ஆதரவு கிடையாது என்று பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி