Sri Lanka Brodcasting Corporation

Thu10192017

Last updateWed, 18 Oct 2017 1pm

உள்ளூர்

சர்வதேச வெசாக் உற்சவத்தில் 84 நாடுகளைச் சேர்ந்த 750 க்கும் அதிகமான பௌத்த பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளனர்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கையில் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் வெசாக் உற்சவத்தில் 84 நாடுகளை பிரதிநித்துவப்படுத்தி 750க்கும் அதிகமான பௌத்த பிரதிநிதிகள் கலந்து கொள்வதாக புத்தசாசன அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்தார். அவர்கள் அனைவரும் தமது வருகையை உறுதிப்படுத்தியுள்ளனர்.

பங்களாதேஷ், கம்போடியா, தென்கொரியா, வியட்னாம், இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், நேபாளம், மலேசியா, மற்றும் பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மன், ரஷ்யா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் இதில் அடங்குகின்றன. பல நாடுகளில் இருந்து மகா நாயக்கர்களும், பங்குபற்றவுள்ளனர். ஆரம்ப வைபவத்தில் பிரதம அதிதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொள்ளவுள்ளார். ஞாயிற்றுக்கிழமை கண்டியில் நடைபெறும் நிறைவு வைபவத்தில் நேபாள ஜனாதிபதி பிந்தியாதேவி பண்டாரி கலந்து கொள்வார். எட்டு நாடுகளின் அமைச்சர்கள் சர்வதேச வெசாக் வைபவத்தில் கலந்து கொள்வார். நேபாள ஜனாதிபதி எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு வருகை தருகிறார். அவரையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பூரண அரச மரியாதையோடு விமான நிலையத்தில் வரவேற்பார்.

இந்திய பிரதமர் நரேந்திய மோதி எதிர்வரும் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைகிறார். அவரை பூரண அரச மரியாதையோடு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்பார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி