Sri Lanka Brodcasting Corporation

Fri04272018

Last updateThu, 26 Apr 2018 9am

உள்ளூர்

சைற்றம் நெருக்கடிக்கு தீர்வு காண கொள்கை ரீதியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் தேவைகளுக்காக வேலை நிறுத்தங்களில் ஈடுபடுகின்றமை பற்றி ஜனாதிபதி கவலை வெளியிட்டுள்ளார்.

சைற்றம் தனியார் மருத்துவக் கல்லூரியை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு தீர்வு காண பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற ரீதியில் கொள்கை ரீதியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கொள்கைக்கு அமைவாக செயற்பட்டு சிலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றமை பற்றி தாம் கவலையடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றினார். அரசியல் பகடைக்காய்களாக மாறாமல், எதிர்கால நலன் கருதி கல்வி செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மருத்துவபீட மாணவர்களை ஜனாதிபதி கேட்டுள்ளார். கல்வியில் எந்த மாணவனுக்கும் அநீதி ஏற்பட இடமளிக்கப்படமாட்டாது, சைற்றம் தனியார் மருத்து கல்லூரி தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு அரசாங்கம் இதுவரை தீர்வு வழங்கியிருக்கிறது.


சைற்றம் மருத்துவ கல்லூரியில் கற்கும் மாணவர்களுக்கு நியமனத்திற்கு முன்னரான பயிற்சி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இலங்கை மருத்துவப் பேரவை என்பனவற்றின் பரீட்சைகளில் சித்தியடைதல் போன்ற அம்சங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.


மருத்துவ பட்டப்படிப்புக்கான குறைந்த பட்சத் தகைமை, தனியார் மருத்துவக் கல்லூரியை அரசாங்கத்துடன் இணைத்து, தனிநபருக்கு சொந்தமான நிறுவனத்தை கூட்டு தொழில் முயற்சியாக மாற்றுதல், நிர்வாக சபையில் அரசாங்கம் பரிந்துரைக்கும் உறுப்பினர்களை நியமித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசியல் தேவைகளுக்கான முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்தத்தினால் சலுகைகளை பெறுவோர்களன்றி நாட்டின் பொதுமக்களே பாதிக்கப்படுகிறாhக்ள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். பிரச்சினைகள் இருக்குமாயின் அது பற்றி எந்த சந்தர்ப்பத்திலும், அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்த முடியும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். உலக மக்கள் அனைவருக்கும், பௌத்த மதத்தின் செய்தியை வழங்கும் ஐக்கிய நாடுகள் வெசாக் தின நிகழ்வு இலங்கையில் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் வகையில் சில வைத்தியர்களும், தொழில்சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனமை கவலைக்குரியதாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார் சர்வதேச வெசாக் தின நிகழ்வின் அங்குரார்பண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் இலங்கை வரும்போது கறுப்புக் கொடிகயை ஏற்றுமாறு சிலர் தெரிவித்த கருத்தையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தாய்நாட்டை இந்தியாவுக்கு அடி பணியச் செய்யும் செயல் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்களின் உரிமைகளையும், சலுகைகளையும் பாதுகாப்பதற்காகவே அன்றி நாட்டின் ஒரு பகுதியை வெளிநாட்டவர்களுக்கு வழங்கவோ, வெளிநாடுகளுடன் நாட்டுக்கு பாதகமான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடவோ அல்ல என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி