Sri Lanka Brodcasting Corporation

Sun04222018

Last updateFri, 20 Apr 2018 7pm

உள்ளூர்

மீதொட்டமுல்ல பிரதேசத்தில் வீடுகளை ,ழந்தவர்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்படவுள்ளன.

மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் சரிவினால் வீடுகளை இழந்த 98 குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கும் முறையான வேலைத் திட்டத்தை  அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. முதற் கட்டமாக 30 குடும்பங்களுக்கான வீடுகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி இவர்களுக்கான வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கி வைத்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பல பிரமுகர்கள் இதில் கலந்துகொண்டார்கள். இந்த வீடுகளுக்கென அரசாங்கம் 39 கோடி 20 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளது. வீட்டு பாவனைப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஒரு குடும்பத்திற்கு இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வழங்கப்படவிருக்கிறது. முற்றாக நிர்மூலமான வீடுகளை மதிப்பிடும் நடவடிக்கை பூர்த்தி அடைந்ததன் பின்னர் கூடுதல் பெறுமதியுடைய வீடுகளுக்கான மேலதிக கொடுப்பனவும் உரிய குடும்பங்களுக்கு வழங்கப்படவிருக்கின்றன.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி