Sri Lanka Brodcasting Corporation

Sun12172017

Last updateSun, 17 Dec 2017 8am

உள்ளூர்

திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கான அதிகார சபை ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இலங்கையின் திண்மகழிவகற்றும் நெருக்கடிக்கு தீர்வுகாண பொருத்தமான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இதன்போது குறிப்பிட்ட ஒரு பிரிவுக்கு தனியான அதிகாரத்தை வழங்குமாறு அவர் கேட்டுள்ளார். மீதொட்டமுல்ல அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் ஜனாதிபதி கருத்து; வெளியிட்டார். இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் வரை வாராந்தம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சர்களையும் அதிகாரிகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்குமாறும் ஜனாதிபதி தனது செயலாளருக்கு பணிப்புரை வழங்கினார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி