Sri Lanka Brodcasting Corporation

Wed08232017

Last updateTue, 22 Aug 2017 6pm

உள்ளூர்

உழைக்கும் மக்கள் சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாட தயாராகிறார்கள்.

நாட்டின் உழைக்கும் மக்களும் தொழிற் சங்க பிரதிநிதிகளும் உலக தொழிலாளர் தினத்தை விமர்;சையாகக்கொண்டாட தயாராகிறார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கண்டி கெட்டம்பே மைதானத்தில் இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பொரளை கெம்பல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி மே தின கூட்டத்தை கொழும்பு பிஆர்சி மைதானத்தில் ஒழுங்கு செய்திருக்கிறது. இலங்கை பொதுமக்கள் முன்னணியின் மே தின கூட்டம் காலி முகத் திடலில் இடம்பெறும். ஜனநாயக மக்கள் முன்னணியின் மே தின கூட்டம் கொழும்பு ஜம்பட்டா வீதியிலும், ஐக்கிய சோசலிச கட்சியின் மே தின கூட்டம் பலா மரச் சந்தியிலும் இடம்பெறவிருக்கின்றன. கொழும்பு கம்யுனிஸ்ட் கட்சியின் மே தின கூட்டம் கொழும்பு விகாரமகாதேசிய திறந்த வெளியரங்கில் இடம்பெறவுள்ளது. முன்னிலை சோசலிச கட்சியின் மே தின கூட்டம் கொழும்பு ஜயந்த வீரசேகர மாவத்தையில் அமைந்துள்ள சனசமூக நிலையத்தில் இடம்பெறவிருக்கிறது. மே தின கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கொழும்பு வரும் மக்களின் நலன்கருதி விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிசார் அறிவித்திருக்கிறார்கள்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி