Sri Lanka Brodcasting Corporation

Mon05212018

Last updateFri, 18 May 2018 7pm

உள்ளூர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இளைஞர் முன்னணியின் தேசிய மாநாடு வெற்றிகரமாக இடம்பெற்றதாக கூறுகிறார் அதன் தலைவர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இளைஞர் முன்னணியின் தேசிய மாநாடு வெற்றிகரமான இடம்பெற்றதென முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நான்கு திசைகளிலும் இருந்து அனைத்து இனங்களையும் சேர்ந்த இளைஞர்கள் இதில் பங்கேற்றனர். சமூகத்தில் பல்வேறு இளம் தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காணுதல் என்ற வேலைத்திட்டம் இளைஞர் முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டல் அதிகார சபையொன்றை நிறுவ ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சாந்த பண்டார தெரிவித்தார். இளைஞர் யுவதிகளின் ஆற்றல்களுக்கு வாய்ப்பளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர, தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கும் தற்போதுள்ள தொழில் முயற்சிகளை விரிவுபடுத்துவதற்கும் கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் இம்முறை கண்டியில் நடைபெறும். பத்து இலட்சம் இளம் உறுப்பினர்களை கட்சியில் சேர்த்துக் கொள்ளும் குறிக்கோளுடன் மே தினத்தன்று இளைஞர் யுவதிகள் முன்னின்று செயற்படுவார்கள் என்றும் சாந்த பண்டார குறிப்பி;ட்டார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி