Sri Lanka Brodcasting Corporation

Sun04222018

Last updateFri, 20 Apr 2018 7pm

உள்ளூர்

மக்களின் உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பலப்படுத்தி நல்லிணக்கத்தின் ஊடாக நாட்டை புதிய திசையில் இட்டுச் செல்வதற்கு ஜனாதிபதி மேற்கொள்ளும் முயற்சிக்கு ஜேர்மன் அரசாங்கம் பாராட்டு.

மக்களின் அடிப்படை உரிமைகளையும், ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்தி நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி நாட்டை ஒரு புதிய திசையை நோக்கி முன்னெடுத்துச் செல்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளும் முயற்சி பாராட்டத்தக்கதென ஜேர்மன் பாராளுமன்றத்தின் சபாநாயகர் நொபட் லெமட் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள லெமட் உள்ளிட்ட ஜேர்மன் பிரதிநிதிகள் இன்று பிற்பகல் ஜனாதிபதியை அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தனர். இவர்களை அன்புடன் வரவேற்ற ஜனாதிபதி, தான் ஜேர்மனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது சான்சிலர் திருமதி அஞ்சலா மேர்கலுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு ஒத்துழைப்பிற்கு ஒரு பலமான பின்னணியை உருவாக்க முடிந்ததாக குறிப்பிட்டார். இதற்கமைய, ஜேர்மன் பொருளாதார அலுவல்கள் அமைச்சரும் முதலீட்டாளர்கள் பலரும் அண்மையில் நாட்டிற்கு விஜயம் செய்ததாகவும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார்.
 
19 வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஜனநாயக நிறுவனங்களை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கையை அங்கு ஜேர்மன் பிரதிநிதிகள் பாராட்டினர். ஆரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி மேற்கொள்ளும் முயற்சிக்கு ஜேர்மன் அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்பும் கிடைக்குமென திரு.லெமட் அங்கு குறிப்பிட்டார்.
 
இதேவேளை, பௌத்த சமயஸ்தலங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்காக நிறுவப்படும் பௌத்த மறுமலர்ச்சி நிதியத்திற்கு நிதி வழங்கும் நடவடிக்கை இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. சிறிபாத புனிதஸ்தலத்தின் அதிபதி சங்கைக்குரிய பெங்கமுவே தம்மதின்ன நாயக்க தேரர், களுத்துறை போதி பொறுப்புச் சபை, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பௌத்த சங்கம், வோர்க் ஜுவலர்ஸ் நிறுவனம், தம்ரோ நிறுவனம் உள்ளிட்ட பல தரப்புக்களும் அங்கு தமது நிதி அன்பளிப்பை ஜனாதிபதியிடம் கையளித்தன.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி