Sri Lanka Brodcasting Corporation

Tue04242018

Last updateTue, 24 Apr 2018 1pm

உள்ளூர்

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.


இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சரும், தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான ஜெனரல் சாங் வாங்க்;வான் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று இடம்பெற்றது. இரு தரப்புக்கும் இடையிலான நீண்டகால உறவுகள் பற்றி நினைவுகூர்ந்த ஜனாதிபதி நாட்டின் சுதந்திரத்திற்கும், பாதுகாப்புக்கும் சீனா வழங்கும் ஒத்துழைப்புக்களை பாராட்டிப் பேசினார். இலங்கையின் பாதுகாப்பு படைகளுக்கு சீனா வழங்கும் ஒத்துழைப்புக்களுக்காக ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். இவ்வாறான ஒத்துழைப்புக்கள் தொடர்ந்தும் கிடைக்கும் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார். யுத்தத்தின்போது சீனா வழங்கிய ஒத்துழைப்பை அவர் பாராட்டிப் பேசினார். இரு தரப்பு உறவுகள் வலுவடைந்துள்ளமையினால் ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படும் என்று கூறிய ஜனாதிபதி, இலங்கையின் கௌரவம், சுதந்திரம், தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி கூறினார். இலங்கையின் சமூக பொருளாதார, நலன்நோம்பு நடவடிக்கைகளுக்காக வலுவான அடித்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அங்கு கருத்து வெளியிட்ட சீனப் பாதுகாப்பு அமைச்சர் கூறினார். சீன ஜனாதிபதியின் வாழ்த்துச்செய்தியையும் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் கையளித்தார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி