Sri Lanka Brodcasting Corporation

Fri06232017

Last updateFri, 23 Jun 2017 9am

உள்ளூர்

சில அரச சார்பற்ற அமைப்புக்கள் கூறுவதற்கு ஏற்ப அரசாங்கத்தை நடத்துவதற்கோ அல்லது முப்படையினர் மீது குற்றம் சுமத்துவதற்கோ தாம் தயாரில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

வெளிநாட்டு தொடர்புகளின் அடிப்படையில் செயற்படும்சில அரசசார்பற்ற நிறுவனங்கள் தெரிவிக்கும் வகையில்அரசாங்கத்தை நடத்துவதற்கும் முப்படையைச் சேர்ந்தஉறுப்பினர்களுக்கு குற்றப்பத்திரிகையைக்கையளிப்பதற்கும் அல்லது வழக்கை விசாரிப்பதற்கும்தாம் எந்தவகையிலும் தயாரில்லை என்று ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - பலாலியில் உள்ள இராணுவ முகாமைப்பார்வையிடுவதற்காக இன்று காலை ஜனாதிபதி அங்குசென்றார். இதன் போது முப்படை, மற்றும் பொலிஸார்மத்தியில் அவர் உரையாற்றினார்.

படைவீரர்களுக்கு எதிராக வெளிநாட்டு நீதிபதிகளைஅழைத்து வழக்கு விசாரிக்கப்பட வேண்டுமென்று ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர்சமீபத்தில் தெரிவித்த ஆலோசனையை தாம் முற்றாகநிராகரிப்பதாகவும் ஜனாதிபதி கூறினார். தாய்நாட்டின்சுதந்திரத்திற்காக தமது உயிரைத் தியாகம் செய்துசெயற்பட்ட வீரம்மிக்க படைவீரர்களின் பாதுகாப்பிற்கும்கௌரவத்திற்குமாக தமது ஆட்சிக் காலப்பகுதியில்பொறுப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதிவலியுறுத்தினார். பணத்திற்காக செயற்படும் சில அரசசார்பற்றஅமைப்புக்கள், குறுகிய அரசியல் நோக்கத்தைநிறைவேற்றுவதற்காக செயற்படும் எதிரிகள், அரசியல்சக்திகள் எத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்தியபோதிலும், படைவீரர்களின் பாதுகாப்பு விடயத்திற்குதாமே பொறுப்பாக இருப்பதாகவும் ஜனாதிபதிதெரிவித்தார். படைவீரர்களின் கௌவரத்திற்கு பாதிப்புஏற்படும் வகையிலான செயற்பாடுகளுக்கு தமது பதவிகாலத்தில் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதிகூறினார்.

உள்ளுர் மற்றும் வெளிநாடு என்ற ரீதியில் அரசாங்கத்தின்மீது எத்தகைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோதிலும், எவ்வாறான திட்டங்கள்முன்னெடுக்கப்படடபோதிலும், தாய்நாட்டின் சுதந்திரம், சுயாதீனத்தன்மையைப் போன்று நாட்டின்இறைமையைப் பாதுகாத்து அரசியல் யாப்பின் மூலம்நாட்டின் மக்களையும் பாதுகாப்பதற்காகநிறைவேற்றப்படவேண்டிய பொறுப்புக்களைநிறைவேற்றுவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார். படையினருக்கு தொழில்நுட்ப அறிவு, பயிற்சிக்கானசந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். தேவையான வசதிகளும் இவர்களுக்கு வழங்கப்படம். இலங்கை முப்படை உலகின் உன்னதமானமுப்படையினராக முன்னோக்கிப் பயணிப்பதற்கு தமதுநிர்வாகத்தின் மூலம் அர்ப்பணிப்பதாகவும் ஜனாதிபதிகுறிப்பிட்டார்.

இன்று காலை யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத்தலைமையகத்திற்கு சென்ற ஜனாதிபதி அங்கு இராணுவவீரர்களின் சேமநலன்களைக் கேட்டறிந்தார். யாழ்ப்பாணத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றபடைவீரர்களுக்கு பரிசில்களும் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையில் வழங்கப்பட்டன. ஜனாதிபதியின்வருகையை முன்னிட்டு, பாதுகாப்புப் படைத்தலைமையக வளவில் மரக்கன்று ஒன்றும் நாட்டப்பட்டது. இதன் பின்னர், பலாலி விமானப் படை முகாமுக்கு விஜயம்செய்த ஜனாதிபதி அங்கு இராணுவ வீரர்களுடன்நட்புறவுடன் உரையாடினார். அவர்களது பிரச்சினைகள்தொடர்பிலும் கவனம் செலுத்தினார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி