Sri Lanka Brodcasting Corporation

Mon06262017

Last updateSun, 25 Jun 2017 9am

உள்ளூர்

எத்தகைய சவாலுக்கு மத்தியிலும் நாட்டுக்குத் தேவையான மாற்றத்தை ஏற்படுத்துப் போவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் பற்றி கேள்வி எழுப்புவோர், நாட்டில் அமுலில் இருந்த முறைமை பற்றியும் தற்போதுள்ள முறைமை பற்றியும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுள்ளார்.

நாட்டுக்கு தேவையான மாற்றத்தை எந்தவொரு சவாலுக்கு மத்தியிலும் நிறைவேற்றப் போவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார் வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் ஆறு மாடிக் கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழச்;சியில் ஜனாதிபதி உரையாற்றினார்.

இன்று நாட்டில் சுயாதீனமாக இயங்கக்கூடிய நீதிமன்ற வலைப்பின்னல் உருவாகியுள்ளது. இலவச சுகாதார சேவையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார துறையில் தடைகளை மீறி பல காரியங்களை நிறைவேற்ற முடிந்துள்ளது. அரசாங்கம் பல்தேசிய கம்பனிகளுக்கு பின்னால் செல்ல வேண்டிய அவசியம் ஒழிந்துள்ளதென ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

மருத்துவமனை கட்டடங்களை நிர்மாணிக்கும் போது, வைத்தியசாலையின் தேவைகள் பற்றி மாத்திரமின்றி பணியாளர்களுக்கான வசதிகள் பற்றியும் கவனம் செலுத்துவது அவசியம். மருத்துவர்கள், தாதிமார் உள்ளிட்ட சகல பணியாளர்களும் எதிர்கொள்ளும் தங்குமிட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமென அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் ஆறு மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அந்தக் கட்டடம் 110 கோடி ரூபா செலவில் சகல வசதிகளையும் கொண்டதாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அதனை திறந்து வைத்த ஜனாதிபதி தீவிர கண்காணிப்பு பிரிவிற்கும் குறைமாத சிசுக்களை பாராமரிக்கும் பிரிவுக்கும் விஜயம் செய்தார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி