Sri Lanka Brodcasting Corporation

Mon10232017

Last updateMon, 23 Oct 2017 8am

உள்ளூர்

மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்து நம்பிக்கை சீர்குலைய இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார்.

தமது அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை சீர்குலைய ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உறுதி அளித்துள்ளார். எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை கொண்டிருந்தாலும், அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவது அரசியல் கட்சிகளின் பொறுப்பாகும். ஆட்சியில் இருந்த போது பொதுச் சொத்துக்களையும், திறைசேரியையும் சொந்தத் தேவைகளுக்காக பயன்படுத்தியவர்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முனைகிறார்கள். சலுகைகளை அனுபவிப்பதே அவர்களின் நோக்கமாகும் என ஜனாதிபதி கூறினார். 
 
எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலில் மக்கள் விருப்பத்தின் பிரகாரமே ஆட்சியை மாற்ற முடியும். அதற்கு முன்னதாக அரசாங்கத்தை எவரும் கவிழ்க்க முடியாதென ஜனாதிபதி குறிப்பிட்டார். அவர் ஏறாவூர் அலிஹார் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றினார். சமகால அரசாங்கம் பல வருடகாலம் ஆட்சியில் இருக்கவில்லை. இரண்டு வருட காலத்திற்குள் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்களை இன்றே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வலுவான அரசு என்ற ரீதியில் இலங்கையை அபிவிருத்தி அடைந்த நாடாக கட்டியெழுப்பப் போவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 
 
நிலைபேறான யுகத்திற்கான மூன்றாண்டுகால அழைப்பு என்ற திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்திற்கான மக்கள் சந்திப்பு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற ஜனாதிபதி நேற்று சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம், கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி உள்ளிட்ட பல பாடசாலைகளுக்கும், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கும் விஜயம் செய்தார். 

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி