Sri Lanka Brodcasting Corporation

Mon10232017

Last updateMon, 23 Oct 2017 8am

உள்ளூர்

பௌத்த மதத்தை பாதுகாப்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புக் கொண்டுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு.

பௌத்தத்தைப் பேணிப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் நாடெங்கிலும் பல விசேட திட்டங்களை அமுலாக்கியிருப்பதாக பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்கள் மத்தியில் சமயம் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்திநாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் வேலைத்திட்டங்கள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். காலி கராப்பிட்டி ஸ்ரீ சுதர்ஷனாராம விஹாரையில் இடம்பெற்ற சமயச் சடங்கொன்றில் அவர் உரையாற்றினார்.

கடந்த 12 நாட்களில் பல இடங்களிலும் புதிய தொழிற்சாலைகளை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டன. சில தொழிற்சாலைகள் திறந்து வைக்கப்பட்டன. எதிர்காலத்தில் வெலிகமடாலிங் மவுண்ட் பிரதேசத்தில் கைத்தொழில் வலயம் உருவாக்கப்பட உள்ளது.

சுற்றாடல் பாதுகாப்புசட்டத்தை அமுலாக்கல்மனித உரிமைகளைப் பாதுகாத்தல் முதலான நடவடிக்கைகளில் இலங்கை அடைந்த முன்னேற்றம் கருதிஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் வழங்குமாறு ஐரோப்பிய ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. அரசாங்கத்தின் வெளிப்படையான செயற்பாடுகள் காரணமாக ஐரோப்பிய மீன் ஏற்றுமதித் தடையையும் நீக்க முடிந்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கையை சகல நாடுகளும் வரவேற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

கைத்தொழில் அபிவிருத்தி மீதான முட்டுக் கட்டைகளை தேசத் துரோகச் செயல் என்றே தாம் கருதுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி