Sri Lanka Brodcasting Corporation

Mon05212018

Last updateFri, 18 May 2018 7pm

உள்ளூர்

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இழந்ததால் கடந்த காலத்தில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நட்டம் 37 ஆயிரம் கோடி ரூபாவைத் தாண்டுகிறது.

இலங்கைக்கு மீண்டும் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை கிடைப்பதன் மூலம் ஆடை உற்பத்திகடற்றொழில்இறப்பர் உற்பத்தி துறைகள் சார்ந்த ஏற்றுமதிகளுக்கு கூடுதல் அனுகூலங்கள் கிடைக்குமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வரிச்சலுகை மீண்டும் கிடைப்பதன் மூலம் துறைசார்ந்த உற்பத்திகளுக்கான

66 சதவீத வரி முற்றுமுழுதாக நீக்கப்படும். முன்னைய அரசாங்கம் அனுசரித்த தொலைநோக்கற்ற செயற்பாடுகள் காரணமாக 2007ம் ஆண்டு வரிச் சலுகை மட்டுப்படுத்தப்பட்டது. 2010ம் ஆண்டில் முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டது. இதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட நட்டம் 37 ஆயிரம் கோடி ரூபாவை தாண்டுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொடுக்குமாறு ஐரோப்பிய ஆணைக்குழு நேற்று பரிந்துரைத்துள்ளது. இதற்கு ஐரோப்பிய பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைத்ததும் வரிச்சலுகை அமுலுக்கு வரும்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி