Sri Lanka Brodcasting Corporation

Wed06282017

Last updateMon, 26 Jun 2017 10am

உள்ளூர்

உமா ஓயா அபிவிருத்தித் திட்டத்தின் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர இடர்நிலைமையின் கீழ் நிவாரணங்கள்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் சார்ந்த குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தயாராகிறது.

இந்தத் திட்டத்தின் பிரதான அம்சமாகத் திகழும் சுரங்கத்தில் ஏற்பட்ட நீர்க் கசிவால் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. குறிப்பாக பண்டாரவளைஎல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கிணறுகள் வற்றியதுடன்வீட்டுச் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பிரதேசவாசிகளின் அன்றாட வாழ்க்கையில் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டன.

இந்த மக்களின் வாழ்க்கையில் இயல்பு நிலையை ஏற்படுத்தும் நோக்கத்துடன்முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை அமைத்துக் கொடுப்பதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இவை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி