Sri Lanka Brodcasting Corporation

Mon01222018

Last updateMon, 22 Jan 2018 8pm

உள்ளூர்

இன்று வெள்ளிக் கிரகம் பிரகாசமாக ஒளிர்வதைக் காணலாமென கோள் மண்டலம் அறிவிப்பு.

இன்றைய தினம் வெள்ளிக் கிரகம் பிரகாசமாகத் தென்படுமென இலங்கை கோள் மண்டலம் அறிவித்துள்ளது.

இன்று வெள்ளிக் கிரகமும்எதிர்வரும் 19ம் திகதி புதன் கிரகமும் வேறெந்த நாட்களையும் விட பிரகாசமாகத் தென்படக்கூடும். இவை சூரியனைச் சுற்றி நீள்வட்டப் பாதையில் சஞ்சரிக்கின்றன. இவற்றின் சுழற்சி வேகம் ஏனைய கிரகங்களின் சுழற்சி வேகத்தை விட அதிகமாகுமென கோள் மண்டலம் சுட்டிக்காhட்டியுள்ளது.

இன்று இரவு 6.30 தொடக்கம் 9.00 மணி வரையிலான காலப்பகுதியில் வான் பரப்பின் மேற்குப் பகுதியில் வெள்ளிக்கிரகம் பிரகாசமாக ஒளிரும். தொலைநோக்கியின் ஊடாக அவதானிப்பதன் மூலம் மாற்றங்களை தெளிவாக காணலாமென கோள் மண்டலம் கூறுகிறது.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி