Sri Lanka Brodcasting Corporation

Mon07242017

Last updateMon, 24 Jul 2017 1pm

உள்ளூர்

18ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஒழித்தமை பொதுமக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

18ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஒழித்தமை பொதுமக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சமகால அரசாங்கத்தின் நட்பு ரீதியான வெளிநாட்டுக் கொள்கை சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணத்தை பெறுவதற்கு உதவியாக இருந்தது என்று குறிப்பிட்டார். நாட்டின் வறுமை நிலைமை 25 தொடக்கம் 27 வீதமாகும். இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு சிறந்த செயற்றிட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.


மூன்று வருட நிலைபேறான அபிவிருத்தி திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் நலன் கருதி ஸிரம-சக்தி தேசிய வேலைத் திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். விவசாயம் மற்றும் நீர்ப்பாசன துறைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். நாட்டின் மீது காணப்படும் பாரிய கடன் பழுவை கவனத்தில் கொண்டு அதனை மீளச் செலுத்துவதற்கும் நடவடிக்னை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி சிறிசேன தெரிவித்தார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி