Sri Lanka Brodcasting Corporation

Tue04242018

Last updateTue, 24 Apr 2018 1pm

உள்ளூர்

ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் மூன்றாம் ஆண்டு ஆரம்பத்தை நிலைபெறான அபிவிருத்தியின் யுகமாக பிரகடனப்படுத்தி அதனை முன்னெடுப்பதற்கு ஆரோக்கியமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் மூன்றாம் ஆண்டு ஆரம்பத்தை நிலைபெறான அபிவிருத்தியின் யுகமாக பிரகடனப்படுத்தி அதனை முன்னெடுப்பதற்கு ஆரோக்கியமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தெற்காசியா உலகப் பொருளாதாரத்தில் மிக வேகமான முன்னேறிவரும் பொருளாதார வலயமாக தற்சமயம் கருதப்படுகிறது. அந்த வகையில் இலங்கையும் இந்த வேகமான அபிவிருத்திப் பயணத்தில் ஒரு அங்கமாக அமைந்துள்ளது. சமகால அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை மேம்படுத்தியுள்ளது. அரச நிர்வாகத்தை விமர்ச்சிப்பதற்கு ஊடகங்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அபிவிருத்தியின் பலாபலன்களை பொதுமக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருந்தபோதிலும், சில தரப்பினர் நாட்டின் அபிவிருத்திப் பயணத்தை தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொள்கின்றனர். இத்தகைய குழுவினரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டிய கடப்பாடும் அரசாங்கத்திற்கு உண்டு என்று பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் அபிவிருத்திப் பயணத்திற்கு தடை ஏற்படுத்தும் குழுவினரின் மனங்களை மாற்ற வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உண்டென்று பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் அபிவிருத்திப் பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் பல புதிய சட்ட விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் விக்மரசிங்க மேலும் தெரிவித்தார்.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி