Sri Lanka Brodcasting Corporation

Sat06232018

Last updateFri, 22 Jun 2018 1pm

உள்ளூர்

நாட்டின் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை முன்னெடுப்பது ஏனைய நாடுகளுக்கு ஒரு சிறந்த உதாரணம் என்று, இந்தியாவின் ஆந்திரப் மாநில முதலமைச்சர் ஸ்ரீ சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

நாட்டின் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை முன்னெடுப்பது ஏனைய நாடுகளுக்கு ஒரு சிறந்த உதாரணம் என்று, நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட இந்தியாவின் ஆந்திர மாநில முதலமைச்சர் ஸ்ரீ சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். தமது மாநிலத்தில் வறுமையi ஒழிப்பதற்கு மாநில அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் திரு.சந்திபாபு நாயுடு விளக்கிக் கூறினார். 2017ஆம் ஆண்டை இலங்கை வறுமை ஒழிப்பு ஆண்டாக பிரகடனப்படுத்தியமையை அவர் பாராட்டினார்.


இலங்கையின் சுகாதாரத்துறை இதுவரை அடைந்த முன்னேற்றங்களை ஆந்திர மாநில முதலமைச்சர் பாராட்டிப் பேசினார். இலங்கை வாழ் மக்களுக்கு சமாதான மகிழ்ச்சியான எதிர்காலம் உள்ளது என்று அவர் கூறினார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இந்த நிகழ்வில் ஐந்து பிரசுரங்களை வெளியிட்டது. கிராம-சக்தி இணையத்தளமும் இந்நிகழ்வில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இடம்பெற்றது செய்தி

 

வெளிநாட்டு செய்தி