உள்ளூர்
நீண்டகால மின் உற்பத்தி வேலைத் திட்டத்தை அமுலாக்குமாறு ஜனாதிபதி பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு ஆலோசனை.
- Details
- Published on Wednesday, 25 April 2018 20:01
- Written by slbc news
2018 இற்கும். 2037 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்காக வகுக்கப்பட்ட நீண்டகால மின்னுற்பத்தி திட்;டத்தை அமுலாக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்தத் திட்டத்தை துரிதமாக அமுலாக்கும் வழிவகைகளை ஆராய்வது பற்றி ஆராயும் கூட்டம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட வேண்டிய மின்னுற்பத்தி நிலையங்கள் அடங்கலாக நீண்டகால மின்னுற்பத்தி திட்டத்தை இலங்கை மின்சாரசபை வழங்கியுள்ளது. அது அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அமுலாக்குவதில் சிக்கல்கள் இருந்தால், அவற்றை துரிதமான களைந்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மே தினக் கூட்டம் மட்டக்களப்பில்.
- Details
- Published on Wednesday, 25 April 2018 19:54
- Written by slbc news
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நேற்றைய நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் மத்திய நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.
தொழிலாளர் வர்க்கத்திற்காக பாடுபட்டு அளப்பெரும் சேவைகளை நிறைவேற்றிய
ரி.பி.இலங்கரட்ன, அலவி மௌலானா போன்ற தொழிற்சங்கத் தலைவர்களை பாராட்டும் வைபவம் எதிர்வரும் முதலாம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறுமென அமைச்சர் கூறினார். அவர் இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தகவல் அறிவித்தார்.
மே தின நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் மட்டக்களப்பில்.
- Details
- Published on Wednesday, 25 April 2018 13:46
- Written by slbc news
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தை அடுத்த மாதம் 7ஆம் திகதி மட்டக்களப்பில் நடத்த நேற்றைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய நிறைவேற்று சபையில் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் மத்திய நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இது தவிர, ரி.பி.இலங்கரட்ன, அலவி மௌலானா போன்ற தொழில் வர்க்கத்திற்காக அளப்பெரும்
சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக மூன்று நீண்டகால ஒப்பந்தங்களை எட்ட அரசாங்கம் தயார்.
- Details
- Published on Wednesday, 25 April 2018 13:45
- Written by slbc news
சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக மூன்று நீண்டகால உடன்படிக்கைகளை எட்டுவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது. எதிர்வரும் 8 மாதங்களுக்குத் தேவையான டீசல், பெற்றோல் மற்றும் விமானத்திற்கான எரிபொருளை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு அமைச்ச்ரவை அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் சுத்திகரிப்புப் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான மசகு எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் நீண்டகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவிற்கு மீன் ஏற்றுமதி செய்ததன் மூலம் 92 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை வருமானம்.
- Details
- Published on Wednesday, 25 April 2018 13:44
- Written by slbc news
ஐரோப்பிய ஒன்றியம் மீன் ஏற்றுமதி மீதான தடையை நீக்கியதன் பின்னர் கடந்த 21 மாதங்களில் 58 ஆயிரம் மெற்றிக் தொன்னுக்கும் மேற்பட்ட மீன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 92 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட அந்நிய செலாவணி ஈட்டப்பட்டுள்ளது. இதுவரை மீன் பதனிடல் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 68ஆக அதிகரித்துள்ளது. தடை நிலவிய காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 34ஆக காணப்பட்டது. சூறை மீன், இறாள், நண்டு என்பன கூடுதலாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன
பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக இதுவரை 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது.
- Details
- Published on Tuesday, 24 April 2018 20:26
- Written by slbc news
நாட்டின் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாப்பதற்காக திட்டமிட்ட குற்றச் செயல்களையும், போதைப் பொருளையும் கட்டுப்படுத்த உச்ச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. இதில் ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் பாரிய பொறுப்பு இருப்பதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அவரது அமைச்சில், அமைச்சின் செயலாளர் பொலிஸ் மாஅதிபர் ஆகியோருடன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
துறைமுகம், தெற்கு, மேல், கரையோரப் பிரதேசங்கள் ஊடாக நாட்டுக்குள் போதைப் பொருள் கொண்டுவரப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த பொலிஸார் உரிய நடவடிக்கையை எடுத்துள்ளனர். திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யவும் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். இதேவேளை, பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக இதுவரை 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ரஷ்யாவின் முன்னாள் தூதுவரை இலங்கைக்கு கொண்டுவருவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சர்வதேச பொலிஸார் ஊடாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கு எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என பெற்றோலிய வளத்துறை அமைச்சின் செயலாளர் வலியுறுத்தல்.
- Details
- Published on Tuesday, 24 April 2018 13:28
- Written by slbc news
எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஒரு மாத காலமாக பேச்சுவார்த்தை இடம்பெற்ற போதிலும், இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் மீது மேலதிக சுமையை சுமத்துவதற்கு அரசாங்கம் தயார் இல்லை என அவர் குறிப்பிட்டார். இந்திய எண்ணெய் கம்பனி எரிபொருளின் விலையை அதிகரித்ததன் பின்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு
நிலைபேறான எரிசக்தி பாவனையின் அவசியம் குறித்து அமைச்சர் திலக் மாரப்பன வலியுறுத்தல்.
- Details
- Published on Tuesday, 24 April 2018 13:26
- Written by slbc news
வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கடந்த வாரம் ஜேர்மனியின் பேர்னிங் நகரில் நடைபெற்ற எரிசக்தி நிலைமாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்றார். எரிசக்தித் துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் குறித்து கலந்துரையாடும் ஒரு முக்கிய சர்வதேச மாநாடாக இது விளங்குகிறது. கொள்கை வகுப்பாளர்கள், தொழில்சார் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர். அங்கு பாதுகாப்பான
பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் பங்கேற்ற தூதுக்குழுவினர் பற்றி சில ஊடகங்கள் போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு அறிவிப்பு.
- Details
- Published on Tuesday, 24 April 2018 13:25
- Written by slbc news
பிரித்தானியாவில் நடைபெற்ற பொதுநலவாய வர்த்தக மற்றும் முதலீட்டுச் சபையின் வர்த்தக மாநாட்டில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் பங்கேற்ற தூதுக்குழுவினர் பற்றி சில ஊடகங்கள் போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்ட 42 இலங்கை வர்த்தகர்களுடன் அமைச்சர் இந்த மாநாட்டில் பங்கேற்றார். இலங்கை ஜனாதிபதிக்கும், அமைச்சர்களுக்கும் வர்த்தக சபையின் அதிகாரிகளுக்கும் மாத்திரமே அழைப்பு கிடைக்கப் பெற்றதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் வருமானம் புத்தாண்டுக் காலப்பகுதியில் அதிகரிப்பு.
- Details
- Published on Tuesday, 24 April 2018 13:24
- Written by slbc news
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் முதல் தடவையாக இந்த புத்தாண்டுக் காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டியுள்ளது. பண்டிகைக் காலத்தில் மீன் விற்பனை 68 சதவீதத்தால் அதிகரித்துள்ள அதேவேளை, கிடைக்கப் பெற்ற வருமானம் 77 சதவீதத்தால் அதிகரித்திருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர