சிறப்பு

பொசொன் வாரம் அடுத்த மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகிறது

அடுத்த மாதம் 24ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை பொசொன் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளரும், பொசொன் ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான ஆர்.எம்.வன்னிநாயக்க தெரிவித்துள்ளார். பொசொன் போயா தின நிகழ்வு அடுத்த மாதம் 27ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.

பொசொன் காலப்பகுதியில் எட்டு லட்சத்திற்கும், பத்து லட்சத்திற்கும் இடைப்பட்ட அடியார்கள் அனுராதபுரம் செல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு;ள்ளன.