சிறப்பு
நாடு முழுவதும் இடம்பெறும் சித்திரைப் புத்தாண்டு விசேட நிகழ்வுகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இம்முறையும் நேரடியாக ஒலிபரப்புச் செய்ய தயாராகியுள்ளது.
- Details
- Published on 13 April 2018
- Written by slbc news
நாடு முழுவதும் இடம்பெறும் சித்திரைப் புத்தாண்டு விசேட நிகழ்வுகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இம்முறையும் நேரடியாக ஒலிபரப்புச் செய்ய தயாராகியுள்ளது. கடந்த வருடங்களை போன்று இந்த வருடமும் சித்திரைப் புத்தாண்டு காலத்தில் நாடளாவிய ரீதியில் இடம்பெறும் சிங்கள தமிழ் புத்தாண்டு பாரம்பரிய நிகழ்வுகளை நேரடியாக ஒலிபரப்புச் செய்வதற்கு இலங்கை வானொலி ஏற்பாடுகளை செய்துள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய சேவைகள் ஊடாகவும் இந்த நிகழ்வுகளை ஒலிபரப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிமுதல் நண்பகல் 12.35 வரை சிங்கள தேசிய சேவை ஊடாகவும், பிராந்திய சேவைகள் ஊடாகவும் இந்த நிகழ்வுகள் ஒலிபரப்புச் செய்யப்படும். சபாநாயகர் கரு ஜயசூரியவின் இல்லத்தில் இடம்பெறும் நிகழ்வுகள் நேரடியாக ஒலிபரப்புச் செய்யப்படும்.
இதேவேளை, சரித்திரப் புகழ்மிக்க ருஹூனு கதிர்காம மஹா தேவாலயத்தின் சித்திரைப் புத்தாண்டு விழா நாளை இரவு இடம்பெறும். நாளை மாலை 6.30க்கு இந்த விழா ஆரம்பமாகும். ருஹூனு கத்தரகம தேவாலய வளாகத்தில் இந்த சித்தரைப் புத்தாண்டு விழா நிகழ்வுகள் கோலாகலமாக ஆரம்பமாகும் என்று தேவாலயத்தின் பிரதம அரங்காவலர் சொமிபால ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த விழாவில் பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.