சிறப்பு
புத்தாண்டில் சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் நலன்கருதி மேலதிக போக்குவரத்து சேவைகள்.
- Details
- Published on 10 April 2018
- Written by slbc news
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் நலன்கருதி மேலதிக பஸ் மற்றும் ரயில் சேவைகள் அமுலாகின்றன. எதிர்வரும் நாட்களில் போக்குவரத்து சேவையை எதிர்ப்பார்த்து அதிகளவிலான மக்கள் பஸ் மற்றும் ரயில் நிலையங்களுக்கு செல்வார்கள் என அதிகாரிகள் எதிர்ப்பார்த்துள்ளார்கள்.
புத்தாண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து ஒழுங்குகள் பற்றி ரயில்வே திணைக்களத்தின் அதிகாரிகள் எமது நிலையத்திற்கு கருத்துத் தெரிவித்தார்கள். அமுலில் உள்ள ரயில்களுக்கு மேலதிகமாக பண்டிகைக் காலத்தில் கூடுதலான ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன. இலங்கை போக்குவரத்து சபை புத்தாண்டு காலத்தில் மேலதிகமாக இரண்டாயிரம் பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தவிருக்கிறது. இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் உட்பட அதிகாரிகள் கொழும்பு புறக்கோட்டை பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்தவாறு பயணிகளின் தேவைகளை கேட்டறிகிறார்கள் என சபையின் பிரதிப் போக்குவரத்து அத்தியட்சகர் ஆர்.பி.சந்ரசிறி தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு காலத்தில் தனியார் பஸ் வண்டிகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவிருப்பதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்தார். இந்தக் காலப்பகுதியில் பயணிகளின் நலன்கருதி மேலதிக பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன.