Sri Lanka Brodcasting Corporation

Mon02192018

Last updateMon, 19 Feb 2018 1pm

சிறப்பு

டெங்கு ஒழிப்பு முயற்சிக்காக அவுஸ்திரேலியாவின் உதவியுடன் விசேட வேலைத் திட்டம்.

இலங்கை மக்கள் நீண்டகால அடிப்படையில் டெங்கு ஆட்கொல்லியில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள வழிவகுக்கும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இந்தத் திட்டத்திற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் உதவி செய்கிறது. அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் அம்மையார் இதற்காக பத்து இலட்சம் டொலரை வழங்குவது பற்றி யோசனை கூறியிருந்தார். இதற்கென இலங்கை அரசாங்கம் மொனாஷ் பல்கலைக்கழகத்தின் நுளம்பு ஒழிப்பு சர்வதேச திட்டத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு;ள்ளது.

இந்த உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கையில் நுளம்புகள் மூலம் பரவும் டெங்கு முதலான நோய்களுக்கான வைரஸ்களை கட்டுப்படுத்த இரு தரப்புக்களும் கூட்டு நடவடிக்கை எடுக்கவுள்ளன. உலக நுளம்பு ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்தன. அந்த ஆய்வுகளில் சோதிக்கப்பட்ட வொல்போஷியா என்ற பற்றீரியா நுண்ணுயிரை இலங்கையில் பயன்படுத்தி டெங்கு நோயின் வியாபகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஸிக்கா, சிக்குன்-குன்யா முதலான நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றலும் இந்த நுண்ணுயிருக்கு உண்டென கண்டறியப்பட்டுள்ளது.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி