Sri Lanka Brodcasting Corporation

Mon02192018

Last updateMon, 19 Feb 2018 1pm

சிறப்பு

70 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் 70 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுக்கு அமைவாக சதோச நிறுவனம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.
சதோச ஊடாக சுதந்திரத்தைக் கொண்டாடுவோம் என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் அமுற்படுத்தப்பட இருக்கின்றது. மக்கள் இதன் மூலம் பாரிய அளவில் நன்மையடைவார்கள் என்று சதோச நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி எஸ்.எச்.எம்.பராஸ் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ பாஸ்மதி அரிசி 120 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதோடு, ஒரு கிலோ அரிசி 60 ரூபாவிற்கு விற்பனையாகிறது. 500 கிராம் பெரிய வெங்காயம் 55 ரூபாவாகும். 500 கிராம் செத்தல் மிளகாய் 110 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. 500 கிராம் பருப்பு 54 ரூபா 50 சதத்திற்கு விற்பனையாவதாக சதோச நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி