Sri Lanka Brodcasting Corporation

Mon02192018

Last updateMon, 19 Feb 2018 1pm

சிறப்பு

70ஆவது சுதந்திர தின நிகழ்வு கொண்டாட்டத்தை விமர்சையாக நடத்த நடவடிக்கை

நாட்டின் 70ஆவது சுதந்திர தின நிகழ்வை விமர்சையாகவும், பேரபிமானத்தோடும் நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்வார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பல பிரமுகர்களும் நிகழ்வில் கலந்து கொள்வார்கள். பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் எட்வேட்டும் இதில் கலந்து கொள்ளவிருக்கிருக்கிறார். மூவாயிரத்திற்கும் அதிகமான உள்நாட்டு வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். சுதந்திரதினத்திற்கு அமைவாக அடுத்த மாதம் 4ஆம் திகதி சர்வமத நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அன்றைய தினத்தில் விசேட முத்திரை ஒன்றும் வெளியிடப்படவுள்ளது. அன்றைய தினம் இரவு கொழும்பு மாநகரசபை மைதானத்தில் கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள டி.எஸ்.சேனாநாயக்கவின் உருவச் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும், எதிர்வரும் 4 ஆம் திகதி காலை இடம்பெறவிருக்கிறது.

தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து 7ஆம் திகதி வரை வீடுகளிலும், அலுவலகங்களிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு அமைச்சர் மக்களை கேட்டுள்ளார். இதேவேளை நாளை முதல் அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை சுதந்திர தினத்திற்கான ஒத்திகைகள் இடமபெறவுள்ளன. சுதந்திர தினத்தன்று கொழும்பு நகரில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்று பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி