Sri Lanka Brodcasting Corporation

Wed11222017

Last updateWed, 22 Nov 2017 8pm

சிறப்பு

மருந்தாளர்களின் வேலைநிறுத்தத்தை கருத்திற் கொண்டு அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோருக்கு அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் மூலம் இலவசமான முறையில் மருந்துகளை கொள்வனவு செய்யும் வாய்ப்பு.

அரசாங்க மருந்தாளர்கள் சங்கத்தின் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துவரும் வேலை நிறுத்தத்தினால் நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தடுக்கும் நோக்கில் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் மருந்தகங்களின் ஊடாக இலவசமான முறையில் மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரச வைத்தியசாலைகளில் உள்ளக ரீதியாகவோ, வெளிநோயாளர் பிரிவுகளிலோ சிகிச்சைகளை பெற்றுக் கொண்ட நோயாளர்கள் மருந்துவர்களின் பரிந்துரை சீட்டை சமர்ப்பித்து அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் மருந்தகங்களில் இலவசமாக மருந்துகளை கொள்வனவு செய்ய முடியும் என்று கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி எம்.எம்.ரூமி தெரிவித்துள்ளார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி