Sri Lanka Brodcasting Corporation

Wed11222017

Last updateWed, 22 Nov 2017 8pm

சிறப்பு

புதிய அரசியலமைப்பின் தேவை குறித்து மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தல்.

 

நாட்டுக்கு புதிய அரசியல் யாப்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்ட விடயமாகும் என புதிய அரசியல் யாப்பு தொடர்பான பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் குழுவின் தலைவர் லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டுக்கு புதிய அரசியல் யாப்பை அறிமுகம் செய்வது அவசியம் என 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் வலியுத்தி வந்தார்கள் என்று அவர் எமது நிலையத்திற்குக் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் யாப்பை கடுமையான முறையில் எதிர்த்த மஹிந்த ராஜபக்ஷ தற்சமயம் ஏன் அதனை மாற்றி அமைக்க விரும்புவதில்லை என்று அமைச்சர் கபீர் ஹாஷிம் கேள்வி எழுப்பினார். அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை சிங்கள மக்களுக்கு விளக்கம் அளிக்கத் தயார் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எமது நிலையத்திற்கு தெரிவித்தார்.

'சில தரப்புக்கள் 'ஏக்கிய' என்ற  சொல்லை வைத்துக் கொண்டு நாட்டிற்கு தீ வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதன் அர்த்தம் 'ஒற்றை' என்பதாகும். நாட்டைப் பற்றி வெளிநாடுகளில் பேசப்படுவதை நிறுத்த வேண்டுமானால் எமது நாட்டுப் பிரச்சினையை உள்நாட்டிற்குள்ளேயே நாம் தீர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கான தீர்வையே நாங்கள் புதிய அரசியலமைப்பின் ஊடாக எதிர்பார்க்கின்றோம். இதற்காக பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து நாங்கள் கலந்துரையாடி வருகின்றோம். இதுவரை இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லை. இந்த விடயம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டதன் பின்னரே சட்டமாகக் கொண்டுவரப்படும். அதனால் அரசியலமைப்புக் குறித்து குழப்ப வேண்டாம் என்றும் குழம்ப வேண்டாம் என்றும் தாம் சம்பந்தப்பட்ட தரப்புக்களை கேட்டுக்கொள்கின்றோம்' என அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.                   

மஹாசங்கத்தினர் இந்த அரசியலமைப்புத் தொடர்பில் தவறாகப் புரிந்துள்ளார்கள் என அமைச்சர் துமிந்த திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

உத்தேச புதிய அரசியலமைப்பின் மூலம் நாடு பிளவுபடுமா இல்லையா என்பது குறித்து தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சவால் விடுத்துள்ளார்.

 

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி