Sri Lanka Brodcasting Corporation

Sun09242017

Last updateFri, 22 Sep 2017 8pm

 

சிறப்பு

பாரம்பரிய வைத்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சு தீர்வு.

 

பாரம்பரிய வைத்தியர்களை பதிவு செய்யும் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தீர்மானித்துள்ளார்.

ஐக்கிய சுதேச வைத்தியர் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ஐந்து வருடத்திற்கு ஒருமுறை 1500 ரூபாவைச் செலுத்தி, பாரம்பரிய வைத்தியர்களின் ஆயுர்வேத சபையில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்தப் பணத்தை செலுத்த முடியாத நிலையில் வைத்தியர்கள் இருப்பதாக இந்த சந்திப்பில் தெரிய வந்ததை அடுத்து, இவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கு அமைய, பாரம்பரிய வைத்தியர்கள் 70 வயதிற்கு மேற்பட்டிருப்பார்களாயின் கட்டணத்தை அறவிடாமல் இருப்பதற்கும், கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர்களின் அனுமதியுடன் இவ்வாறான வைத்தியர்களின் கட்டணத்தை அறவிடுவதிலிருந்து விடுவிப்பதற்கு அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தீர்மானித்துள்ளார். 

 

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி