Sri Lanka Brodcasting Corporation

Wed11222017

Last updateTue, 21 Nov 2017 8pm

சிறப்பு

நல்லாட்சி அரசாங்கத்தில் செயற்பட்டுவரும்; அமைச்சர்களுக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தும் வேலைத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

நல்லாட்சி அரசாங்கத்தில் செயற்பட்டுவரும்; அமைச்சர்களுக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தும் வேலைத் திட்டம் ஒன்றை கூட்டு எதிர்கட்சி முன்னெடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆசுன் மாரசிங்க தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு திட்டமிட்டதன் மூலம் இந்த விடயம் வெளிப்படையாக உறுதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

2020ஆம் ஆண்டளவில் பல அபிவிருத்தி திட்டப் பணிகள் நிறைவடையவுள்ளன. நாட்டின் கடன் சுமை குறைந்து கூடுதலான தொழில் வாய்ப்புக்கள் உருவாகும். அப்பொழுது கூட்டு எதிர்கட்சிக்கு செயற்படுவதற்கு சந்தர்ப்பமில்லை. முகத்துவார மீனவ துறைமுகம் சில காலமாக எந்தவிதமான வருமானமும் அற்ற நிலையில் மோசமான நிலையில் காணப்பட்டது. இங்கு கடற்றொழிலாளர்களின் வள்ளங்கள் நிறுத்தப்படும் இடமாகும். தனியார் பிரிவினரின் 600 மில்லியன் முதலீட்டுடன் மீன்பிடி வள்ளங்களை திருத்துவதற்கான வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் ராஜித சேனரத்ன நடவடிக்கை மேற்கொண்டார் என்று இந்நிகழ்வில் கலந்து கொண்ட துறைமுக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி சுதர்சன பெர்னாண்டோ தெரிவித்தார். துறைமுகத்தின் ஊடாக மாதாந்தம் 23 இலட்சம் ரூபா வருமானம் கிடைப்பதாகவும் அவர் கூறினார்.இருப்பினும் கூட்டு எதிர்கட்சியைச் சேர்ந்த சிலர் இந்த விடயங்களை கவனத்திற் கொள்ளாது குற்றச்சாட்டுக்களை முன் வைப்பது வருத்ததற்குரிய விடயம் என்று அவர் கூறினார்

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி