Sri Lanka Brodcasting Corporation

Tue02202018

Last updateTue, 20 Feb 2018 10am

சிறப்பு

கழிவுப் பொருட்களை சேகரிப்பதற்காக புதிதாக 180 வாகனங்களை இறக்குமதி செய்ய ஏற்பாடு.

 

திண்மக் கழிவுகள் முறையாக அகற்றப்பட்டு வருவதாக தேசிய திண்மக் கழிவுகள் முகாமைத்துவ மத்தியநிலையம் அறிவித்துள்ளதுஇது தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பணிக்கு அமையதற்பொழுது கழிவுப் பொருட்கள் வழமை போன்று அகற்றப்பட்டு  வருவதாக அதன் பணிப்பாளர்.டி.இலங்கசிங்ஹ தெரிவித்துள்ளார்.

கழிவுப் பொருட்களை சேகரிப்பதற்கு தற்போதுள்ள வாகனங்கள் போதுமானவை அல்லஇதற்காக 180 வாகனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுகொரிய நாடடின்நிதியுதவியின் கீழ் 80 வாகனங்களும் அரசாங்க நிதியின் கீழ் மேலும் 100 வாகனங்களும் இறக்குமதிசெய்யப்பட உள்ளன.

இவ்வருட டிசம்பர் மாதத்திற்கு முன்னர் இவை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

கொரிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 14 மில்லியன்அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளனஅரசாங்கம் 110 கோடி ரூபாவை இதற்காக ஒதுக்கீடுசெய்துள்ளதுசேதனப் பசளை தயாரிப்பிற்கு 9 நவீன இயந்திரங்களை 9 மாகாண சபைகளுக்கு வழங்கத்திட்டமிடப்பட்டுள்ளதுஇதன் கீழ் தயாரிக்கப்படும் சேதனப் பசளை விவசாய நடவடிக்கைகளுக்காகபயன்படுத்தப்படும்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி