Sri Lanka Brodcasting Corporation

Tue08222017

Last updateMon, 21 Aug 2017 8pm

 

சிறப்பு

பாடசாலை விடுமுறை காலத்தை முன்னிட்டு கொழும்பு – கோட்டைக்கும் - பதுளைக்கும் இடையில் ரெயில் சேவை.

 

பாடசாலை விடுமுறை தினத்தை முன்னிட்டு கொழும்பு கோட்டை மற்றும் பதுளைக்கிடையில் விசேட ரெயில் சேவைகள் இடம்பெற இருப்பதாக ரெயில்வே திணைக்கள பொது முகாமையாளர் பி..பி.ஆரியரத்ன தெரிவித்தார்.   இதற்கு அமைவாக அடுத்த மாதம் 9ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரையில் பொதுவான ரெயில் சேவைகளுக்கு மேலதிகமாக விசேட ரெயில் ஒன்று சேவையில் ஈடுபடும்.

இதேவேளை கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி வரை சேவையில் ஈடுபடும் இலக்கம் 1033 என்ற நகரங்களுக்கிடையிலான கடுகதி ரெயில் அடுத்த மாதம் 27 ஆம் திகதி வரை அதன் சேவை தொடர்பிலான நேர அட்டவணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில் கொழும்பு கோட்டையில் மாலை 5.25க்கு ஆரம்பமாகி இரவு 8 மணிக்கு கண்டியைச் சென்றடையும் ரெயில் அடுத்த மாதம் 27 ஆம் திகதி முதல்இதன் சேவை பிற்பகல் 2.20 க்கு புறப்படும். இது மாலை 5.26க்கு கண்டியைச் சென்றடையும்

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி