Sri Lanka Brodcasting Corporation

Tue06272017

Last updateMon, 26 Jun 2017 10am

 

சிறப்பு

சிறுநீரக நோய் அதிகரிக்கும் பிரதேசங்களில் உள்ள மக்கள் ஒவ்வொரு வருடமும் நோய் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

சிறுநீரக நோய் அதிகரிக்கும் பிரதேசங்களில் உள்ள மக்கள் ஒவ்வொரு வருடமும் நோய்தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை தேசிய சிறுநீரகவைத்தியசாலை  பணிப்பாளர் விசேட வைத்தியர் ரத்னசிறி ஹேவகே தெரிவித்துள்ளார்வருடாந்தம் நாட்டில் சுமார் 5 ஆயிரம் பேர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுவதாகவும்அவர் குறிப்பிட்டார்.

சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்பட்ட 3 ஆயிரம் கொடுப்பனவு ஜனாதிபதியின்ஆலோசனைக்கு அமைய 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளதுசிறுநீரக நோய் பெருமளவில் காணப்படும் பிரதேசங்களுக்குவழங்கப்படும் இந்தக் கொடுப்பனவு எதிர்காலத்தில் நோய் காணப்படும் ஏனையபிரதேசங்களுக்கும் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்சிறுநீரக நோயைமுதலில் கண்டுகொள்ள முடியாதுவைத்தியசாலைகளுக்கு சென்று அதுதொடர்பானபரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும்.

சிறுநீரகநோய் பொதுவாக காணப்படும் கம்பஹாபோன்ற பிரதேசங்களில் வாழும்30வயதிற்கு மேற்பட்டோரும் வடமத்திய மாகாணங்களிலும் இந்நோயினால்பாதிக்கப்பட்டவர்கள் காணப்படுகின்றனர்இங்கு 20 வயதிற்கு மேற்பட்டோர் இதுதொடர்பாக பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் தேசிய சிறுநீரகவைத்தியசாலை  பணிப்பாளர் விசேட வைத்தியர் ரத்னசிறி ஹேவகே தெரிவித்துள்ளார்.

இந்த பரிசோதகள் அனைத்தும் அரச வைத்தியசாலைகளில் மேற்கொள்ள முடியும்ஒவ்வொரு வருடமும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர்குறிப்பிட்டார்எமது நிலையத்தில் இடம்பெற்ற 'சுபாரதிநிகழ்ச்;சியில் கலந்து கொண்டபோது அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி