Sri Lanka Brodcasting Corporation

Tue06272017

Last updateMon, 26 Jun 2017 10am

 

சிறப்பு

தமது சுகாதாரம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை.

 

இயற்கை அனர்த்தங்களின் பின்னர் தமது சுகாதார நிலை தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தவேண்டுமென்று சுகாதார அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளதுநாடு முழுவதிலும் உள்ளஆயிரம் பொதுமக்கள் சுகாதாரப் பரிசோதகர்களின் சங்கத்தின்தலைவர் உபுல் ரோஹண இதுதொடர்பில்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று குறிப்பிட்டார்வெள்ளம் காரணமாக சுகாதாரப்பிரச்சினைகள் பல ஏற்பட்டுள்ளனடெங்குஎலிக்காய்ச்சல்வயிற்றோட்டம்வாந்திபேதி போன்றநோய்கள் ஏற்படுவதற்கு பெருமளவில் வாய்ப்பு உண்டுதமது மாவட்டத்தில் அல்லது மாகாணத்தில்பொதுமக்கள் சுகாதாரப் பரிசோதகர்களுடன் தொடர்புகளை முன்னெடுத்து இந்த நோய்களைத்தவிர்ப்பதற்கு பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் கிடைப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்எமதுநிலையத்தில் இடம்பெற்ற 'சுபாரதிநிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இந்த விடயங்களைக்குறிப்பிட்டார்.

பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டுமாயின் பின்வரும் தொலைபேசிஇலக்கத்தைப் பயன்படுத்த முடியும். 0112-63-56-75 என்ற தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்த முடியும்இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் இணைப்பாளர் விசேட வைத்தியர்ஹசித திசேராகருத்துத் தெரிவிக்கையில்,. டெங்கு டெங்கு நுளம்புகள் பரவுவதைத் தடுப்பதற்காகபொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று தெரிவித்தார்காலநிலை மாற்றம்மக்களின்செயற்பாட்டு முறைடெங்கு நோய் ஏற்படுவதற்கு நேரடியாக காரணமாக அமைந்துள்ளனகழிவுப்பொருள் முகாமைத்துவம் மிகவும் முக்கியமான விடயமாகும் என்றும் அவர் கூறினார்இயற்கைஅனர்த்தத்தை எதிர்கொண்ட பிரதேச மக்கள் சுகாதாரப் பிரிவினருடன் புரிந்துணர்வுடன்செயற்படுமாறும் அவர்கேட்டுக் கொண்டார்.

மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி கருத்து வெளியிடுகையில்கழிவுப் பொருட்களை வகைப்படுத்தல்அவற்றை முகாமைத்துவம் செய்வது மிகவும் முக்கியமானதாகும்என்று கூறினார்கொழும்பு மாநகரசபை இதற்காக தற்போது நேரடியாக பங்களிப்புச் செய்து வருகிறதுஇருப்பினும்பொதுமக்கள் இதற்கு உரிய பங்களிப்பை வழங்கவில்லை என்றும் மாகாண சபைகள்உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர்குறிப்பிட்டார்.  கழிவுப் பொருட்களை கொண்டு செல்வதில்தடைகள் இருக்குமாயின் அவற்றை புறந்தள்ளுவதற்கு உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஆலோசனைகள்வழங்கப்பட்டுள்ளனதனியார் துறையினரின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு  உள்ளுராட்சி மன்றஆணையாளருக்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  பாடசாலைகள்,வீடுகள்அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களுடன் கழிவுப் பொருள்முகாமைத்துவத்தை முறையாக மேற்கொள்வதற்கான தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டம்ஆரம்பிக்கப்பட்டு;ளளது.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி