Sri Lanka Brodcasting Corporation

Sun04302017

Last updateFri, 28 Apr 2017 7pm

 

சிறப்பு

டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் பணியில் 500 பேர் இணைப்பு.

டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை சோதனையிடுவதற்காக சுகாதார அமைச்சு 500 கள உதவியாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது.

மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களுக்குரிய நியமனக் கடிதங்களை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தில் இன்று வழங்கி வைத்;தார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, யாழ்ப்பாணம், திருகோணமலை , இரத்தினபுரி மாவட்டங்களில் கூடுதலான டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளார்கள். இதன் காரணமாக தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டம் அமுலாகிறது. ஏதிர்வரும் 29 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை நாடு தழுவிய ரீதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் நரைடமுறைப்படுத்தப்படும்.

இவ்வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் சுமார் 16 ஆயிரத்து 500 டெங்கு நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24 பேர் மரணத்தை தழுவியுள்ளார்கள்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி