Sri Lanka Brodcasting Corporation

Sun04302017

Last updateFri, 28 Apr 2017 7pm

 

சிறப்பு

கொழும்பு மாவட்டத்தில் 102 பாடசாலைகள் நுளம்பு பெருகும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் 102 பாடசாலைகள் நுளம்பு பெருகும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தப் பாடசாலை வளாகங்களை ஆய்வுக்கு உட்படுத்தும்படி ஜனாதிபதி  உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சு, அண்மையில் நாடளாவிய  ரீதியில் டெங்கு பெருகும் இடங்கள் குறித்து சோதனைகளை நடத்தியது. அந்த வகையில் கொழும்பு மாவட்டத்தில் சுமார் 170 பாடசாலைகள்

சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. கொழும்பின் பிரபல பாடசாலைகளிலும் நுளம்பு பெருகும் இடங்கள் அடையாளம் காணப்படடதாக சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் 9 மாகாணங்களில் இருந்தும் டெங்கு நோயாளிகள்  அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கல்முனை, காலி, மாத்தறை, மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த வருடத்தில் இதுவரை 9 ஆயிரத்து 884 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் டெங்கு நோய் தாக்கத்தினால் 12 மரணங்களும் பதிவாகியிருப்பதாக அமைச்சு தெரிவிக்கிறது.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி