Sri Lanka Brodcasting Corporation

Tue02202018

Last updateTue, 20 Feb 2018 10am

சிறப்பு

அவுஸ்திரேலியாவின் சாஸ்த்திரிய இசைக் கலைஞர்களின் பங்கேற்புடன் கொழும்பில் இசை விருந்து.

அவுஸ்திரேலியாவின் முன்னணி சாஸ்த்திரிய இசைக் கலைஞர்கள் இருவரின் பங்களிப்புடன் எதிர்வரும் 24ம் திகதி கொழும்பில் இசை நிகழ்ச்சியொன்று மேடையேற இருக்கிறது. அன்றைய தினம் கொழும்பு பிஷொப் கல்லூரி கேட்போர் கூடத்தில் கிற்றார் இசைக் கலைஞர் ஸ்லாவா கிரிகோரியானிஸ்செலோ கலைஞர் ஷரோன் க்ரெபர் ஆகியோர் இசை விருந்து படைப்பார்கள் என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

 

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் இருதரப்பு உறவுகள் ஆரம்பமாகி 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சித் தொடர்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நிகழ்ச்சிக்கான அனுமதிப்பத்திரங்களை கொழும்பு 7ல் அமைந்துள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிராலய அலுவலகத்தில் இலவசமாகப் பெற முடியும். 

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி