Sri Lanka Brodcasting Corporation

Thu10192017

Last updateWed, 18 Oct 2017 1pm

 

சிறப்பு

வடமாகாண டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் நாளையும் பல வேலைத்திட்டங்கள்.

இன்று யாழ் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் நுளம்புகள் பெருகும் இடங்கள் இனங்காணப்பட்டன. நுளம்புகள் பெருக இடமளிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றியும் ஆராயப்பட்டதாக டொக்டர் ஜி.ரஜீவ் தெரிவித்தார். பாடசாலை அதிபர்மார் தலைமையில் டெங்கு ஒழிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 250 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இரண்டு மரணங்களும் பதிவாகியுள்ளன. அவர்களில் ஒருவர் ஒன்பது வயதுடைய பாடசாலை மாணவி என தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் அமைப்பாளர்கள் சிலர் தமக்குரிய கடமைகளை முறையாக நிறைவேற்றாத காரணத்தினால் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவிப்பு

 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் அமைப்பாளர்கள் சிலர் தமக்குரிய கடமைகளை முறையாகநிறைவேற்றாத காரணத்தினால் புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டதாக அமைச்சர்எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Read more...

முச்சக்கர வண்டிகளில் நியம தராதரங்களுக்கு ஏற்ப மீற்றர் மானிகளை பயன்படுத்துவது எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

முச்சக்கர வண்டிகளில் நியம தராதரங்களுக்கு ஏற்ப மீற்றர் மானிகளை பயன்படுத்துவது எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, மீற்றர் மானிகளை உரிய தராதரத்திற்கு ஏற்ப தயாரிக்கும்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய பேரவையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்தார்

கற்றலோனிய சுதந்திர மாநில பிரகடனம் இன்னும் இழுபறியில் இருப்பதாக வெளிநாட்டுச் செய்திகள்

தெரிவிக்கின்றன. இருந்த போதிலும் கற்றலோனிய ஜனாதிபதி கார்ள்ஸ் பூஜ்டெமொன்ட் மற்றும் ஏனைய பிராந்திய தலைவர்கள் சுதந்திர பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய சர்வஜன வாக்கெடுப்பின் பின்னர் இந்த நிலைமை தோன்றியுள்ளது. எவவாறாயினும், கற்றலோனிய பிராந்தியத்தை சுயாதீன மற்றும் ஆட்புற இறைமை கொண்ட ஒரு மாநிலமாக உலக நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று திரு.பூஜ்டெமொன்ட் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் இன்றைய தினம் அரச சேவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தினத்தில் அரச ஊழியர்களுக்கு தேசிய உணவு உற்பத்தியின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தும் விசேட விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன. பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இந்த கருத்தரங்குகளை ஒழுங்கு செய்துள்ளது. அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் நாடளாவிய ரீதியில் இந்த வேலைத்திட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட உள்ளது.

தேசிய உணவு உற்பத்திப் புரட்சித் திட்டத்தின் கடற்றொழில் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

கடல் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இன்று பல்வேறு வேலைத்திட்டங்கள் அமுலாக்கப்படும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சு அறிவித்துள்ளது. பிரதான நிகழ்ச்சி திருகோணமலையில் இடம்பெறும்.

இங்கு 20 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கல்லாறு நன்னீர் இறால் இனப்பெருக்க மத்திய நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது. குடியிருப்பு வசதிகள் இல்லாத மீனவர்களுக்கு சாகரபுர பிரதேசத்தில் கடற்றொழில் வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்படும்.

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மீன் விற்பனை நிலையமும் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த விற்பனை நிலையம் நவீன முறையில் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது.

மலையக பெருந்தோட்ட மக்களின் போஷாக்கை மேம்படுத்தும் நோக்கில் பெருந்தோட்டப் பகுதிகளில் நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படும். இதற்காக ஐந்து கோடி ரூபா செலவிடப்படவுள்ளது. இவை தொடர்பான நிகழ்ச்சிகளில் அமைச்சர் மஹிந்த அமரவீர, ராஜாங்க அமைச்சர் தீலிப் வெத-ஆரச்சி ஆகியோர் கலந்துகொள்வார்கள்

ஹம்பாந்தோட்டையில் கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்ட 28 பேர் விளக்கமறியலில்.

 

ஹம்பாந்தோட்டையில்நேற்றுகலகம்விளைவிக்கக்கூடியவகையில்செயற்பட்ட 28 பேரைஎதிர்வரும்16ம்திகதிவரைவிளக்கமறியலில்வைக்குமாறுஹம்பாந்தோட்டைநீதவான்மஞ்சுளகருணாரத்னஉத்தரவிட்டுள்ளார்இவர்கள்நேற்றிரவுநீதவான்முன்னிலையில்ஆஜர்படுத்தப்பட்டார்கள்இதில் 7 பெண்களும்அடங்குகிறார்கள்.  

கொழும்பு கோட்டை ரயில் நிலையம் அமைக்கப்பட்டு இன்றுடன் 100 வருடங்கள் பூர்த்தி.

கொழும்பு கோட்டை ரயில் நிலையம் திறக்கப்பட்டு இன்றுடன் 100 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இந்த ரயில் நிலையத்தை நிர்மாணிப்பதற்கென அப்போது 98 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டது. ரயில் நிலையம் திறக்கப்பட்டு 100 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

உலக குடியிருப்பு தினம்' இன்றாகும் - தேசிய வைபவம் மாத்தறையில்

உலக குடியிருப்பு தினம் இன்றாகும். ஐக்கிய நாடுகள் சபை 1985ம் ஆண்டு பிரகடனப்படுத்திய உலக குடியிருப்பு தினம் 1986ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் முதலாவது திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. 'வீடமைப்புக் கொள்கை, தாங்கக்கூடிய வீடு' என்பது இம்முறை உலக குடியிருப்பு தினத்தின் தொனிப்பொருளாகும். 'இலங்கையும் பொருத்தமான வீட்டின் உரிமை அனைவருக்கும்' என்ற தொனிப்பொருளின் கீழ் இந்தத் தினத்தைக் கொண்டாடுகின்றது.

வாழ்வதற்கு மாத்திரம் வீட்டை அமைப்பது போதுமானதல்ல என்றும் அதன் உரிமை வீட்டு பயனாளியிடம் இருப்பது அந்த வீட்டில் வாழும் குடும்பத்தின் வாழ்க்கை நிலையாக உறுதிப்படுத்தப்படுவதற்கு துணை புரியும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அனைத்து பிரஜைகளுக்கும் வீட்டின் உரிமையைப் பெற்றுக் கொடுப்பது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பாகுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மக்களின் எண்ணங்கள் மற்றும் விருப்பங்களுக்கு அமைய பொருத்தமான வீட்டை தேர்ந்தெடுக்கும் முழுமையான சுதந்திரம் இருக்க வேண்டுமென்றும் அதற்குப் பொருத்தமான வழிகாட்டல்களை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதனால் இம்முறை உலககுடியிருப்பு தினத்தின் தொனிப்பொருள் காலத்திற்கு மிகவும் பொருத்தமானது என பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக குடியிருப்பு தினத்தின் தேசிய வைபவம் மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் நடைபெறும். அமைச்சர்களான சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொள்வார்கள். இதற்கிணைவாக வெலிகம, மிதிகம, யசஇசுறுகம, எழுச்சிக் கிராமம் இன்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புலமையாளர்கள் மாநாடு, விசேட கண்காட்சி, 50 கிராமிய வீடமைப்புக் குழுக்களை உருவாக்குதல் உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு இடம்பெறும் விளையாட்டு மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசில் வழங்குதல் மாவட்டத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்குதல், ஆயிரம் குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன் வழங்கல் 50 குடும்பங்களுக்கு செவன வீடமைப்பு நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட பல நிகழ்ச்சித் திட்டங்களும் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நடமாடும் வாகனங்களின ஊடாக தேங்காயை விற்பனை செய்ய நடவடிக்கை.

தேங்காய் விலை அதிகரிப்பு பற்றி உடனடியாக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி தெங்கு உற்பத்தி அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கினார். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடமாடும் வாகனங்களை பயன்படுத்தி தேங்காயை விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

மீன் மற்றும் உணவு வகைகளை பாதுகாப்பதற்கான தொழில்நுட்பத்தை இலங்கைக்கு அறிமுகம் செய்ய ஜப்பான் முன்வந்துள்ளது.

மீன் மற்றும் உணவு வகைகளை நீண்டகாலம் பேணி பாதுகாக்கக்கூடிய வகையிலான தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்க ஜப்பான் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை உலகிற்கு ஜப்பானின் ஏ.பி.ஐ நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

ஜப்பான் சென்றுள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர ஏ.பி.ஐ நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இந்தத் தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கடற்றொழில் உற்பத்திகளில் இடம்பெறும் விரயங்களை குறைக்க இது உதவும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி