Sri Lanka Brodcasting Corporation

Fri04272018

Last updateThu, 26 Apr 2018 9am

சிறப்பு

வெசாக் வாரம் இன்று ஆரம்பம் - அரச வெசாக் வைபவம் பிங்கிரிய ரஜமஹா விஹாரையில்.

தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பமாகிறது.

அமைதியான மனம் ஆரோக்கியம் தரும் என்ற தொனிப் பொருளில் வெசாக் வார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாடெங்கிலும் பௌத்த வணக்கஸ்தலங்கள், அறநெறிப் பாடசாலைகள், பொது அமைப்புக்கள் போன்றவற்றை மையமாகக் கொண்டு தியான, தான, தர்ம நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

இம்முறை அரச வெசாக் வைபவம் குருநாகல் மாவட்டத்தில் உள்ள பிங்கிரிய தேவகிரி ரஜமஹா விஹாரையில் இடம்பெறும். இந்த நிகழ்வில் பௌத்த உயர் பீடங்களின் மஹா நாயக்கர்கள் தலைமையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் அரச வெசாக் வைபவத்தில் கலந்து கொள்வார்கள். இதனை புத்தசாசன அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

விசாக நோன்மதியை முன்னிட்டு தபால் திணைக்களம் 12 ரூபா பெறுமதியுடைய புதிய தபால் முத்திரையை வெளியிடும் என பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் நிமால் கொட்டவலகெதர தெரிவித்தார்.

சுவசரிய இலவச அம்புலன்ஸ் சேவையை விஸ்தரிக்க நடவடிக்கை.

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்;களில் அமுலாகும் சுவசரிய அம்புலன்ஸ் சேவை நாட்டின் ஏனைய பாகங்களுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது.

இந்த சேவையை நிர்வகிப்பதற்காக சுவசரிய மன்றம் என்ற அமைப்பு ஸ்தாபிக்கப்படும். தொலைபேசி மூலமாக சேவையை பெறலாம். இதற்காக அழைக்க வேண்டிய இலக்கம் 1990 ஆகும்.

இந்த சேவையை ஒழுங்குறுத்துவதற்கான சுவசரிய பிரேரணையை வர்த்தமானி ஊடாக பிரசுரித்து அதனை பாராளுமன்றத்தில் சமர்;ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த அமைச்சரவைப் பத்திரத்தி;ற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அடுத்த மாதம் 15ஆம் திகதி வரை இதற்காக விண்ணப்பிக்கலாம். பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாத பாடசாலைகள் பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை கிளைக்கு அறிவிக்க வேண்டும். தனியார்

Read more...

வெசாக் பௌர்ணமி தினத்தையொட்டி முதல் தடவையாக மலேசியாவில் வெசாக் அலங்கார பந்தல் நிர்மாணிக்கப்படுகிறது

மலேசியாவில் முதல் தடவையாக வெசாக் அலங்கார பந்தலொன்று அமைக்கப்படுகிறது. இலங்கை இராணுவத்தினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த வெசாக் பந்தல் எதிர்வரும் வெசாக் தினத்தன்று அங்குரார்ப்பணம் செய்யப்படும்.

Read more...

காணாமல் போனோர் தொடர்பாக காரியாலயம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டமை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் நெகிழ்வுத்தன்மையை வெளிக்காண்பிப்பதாக வலியுறுத்தப்பட்டுள்ளது

காணாமல் போனோர் தொடர்பாக காரியாலயம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டமை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் நெகிழ்வுத்தன்மையை வெளிக்காண்பிப்பதாக களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்; விரிவுரையாளர் சங்கைக்குரிய லெகும்தெனியே பியரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த காரியாலயத்தின் நோக்கம் எவருக்கும் அநாவசிய பாதிப்பை ஏற்படுத்துவது அல்ல. காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விபரங்களை கண்டறிவதே இந்த நிலையத்தின் முக்கிய நோக்கமாகும். காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு தகவல்களை வெளிக்கொண்டு வருவதும் மற்றுமொரு நோக்கமாகும். தகவல்களை அறியும் உரிமையை பலப்படுத்தும் வகையில் இந்தக் காரியாலயம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் தேரர் எமது நிலையத்திற்கு தெரிவித்தார். இன்று காலை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே சங்கைக்குரிய பியரத்தன தேரர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

காணாமல்போனோர்தொடர்பானகாரியாலயசட்டமூலத்திற்குஇணங்க, உறுப்பினர்கள்தெரிவுசெய்யப்பட்டமையானது, அரசியல்பின்னணியோஅல்லதுஇனவாதநோக்கம்கொண்டதாகஅமையவில்லைஎன்றும்இங்குகருத்துவெளியிட்டதொழிற்சங்கஒன்றியத்தின்அங்கத்தவர்சமிந்தகுணசிங்கதெரிவித்தார்

நாடு முழுவதும் இடம்பெறும் சித்திரைப் புத்தாண்டு விசேட நிகழ்வுகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இம்முறையும் நேரடியாக ஒலிபரப்புச் செய்ய தயாராகியுள்ளது.

நாடு முழுவதும் இடம்பெறும் சித்திரைப் புத்தாண்டு விசேட நிகழ்வுகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இம்முறையும் நேரடியாக ஒலிபரப்புச் செய்ய தயாராகியுள்ளது. கடந்த வருடங்களை போன்று இந்த வருடமும் சித்திரைப் புத்தாண்டு காலத்தில் நாடளாவிய ரீதியில் இடம்பெறும் சிங்கள தமிழ் புத்தாண்டு பாரம்பரிய நிகழ்வுகளை நேரடியாக ஒலிபரப்புச் செய்வதற்கு இலங்கை வானொலி ஏற்பாடுகளை செய்துள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய சேவைகள் ஊடாகவும் இந்த நிகழ்வுகளை ஒலிபரப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிமுதல் நண்பகல் 12.35 வரை சிங்கள தேசிய சேவை ஊடாகவும், பிராந்திய சேவைகள் ஊடாகவும் இந்த நிகழ்வுகள் ஒலிபரப்புச் செய்யப்படும். சபாநாயகர் கரு ஜயசூரியவின் இல்லத்தில் இடம்பெறும் நிகழ்வுகள் நேரடியாக ஒலிபரப்புச் செய்யப்படும்.

இதேவேளை, சரித்திரப் புகழ்மிக்க ருஹூனு கதிர்காம மஹா தேவாலயத்தின் சித்திரைப் புத்தாண்டு விழா நாளை இரவு இடம்பெறும். நாளை மாலை 6.30க்கு இந்த விழா ஆரம்பமாகும். ருஹூனு கத்தரகம தேவாலய வளாகத்தில் இந்த சித்தரைப் புத்தாண்டு விழா நிகழ்வுகள் கோலாகலமாக ஆரம்பமாகும் என்று தேவாலயத்தின் பிரதம அரங்காவலர் சொமிபால ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த விழாவில் பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

புத்தாண்டில் சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் நலன்கருதி மேலதிக போக்குவரத்து சேவைகள்.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் நலன்கருதி மேலதிக பஸ் மற்றும் ரயில் சேவைகள் அமுலாகின்றன. எதிர்வரும் நாட்களில் போக்குவரத்து சேவையை எதிர்ப்பார்த்து அதிகளவிலான மக்கள் பஸ் மற்றும் ரயில் நிலையங்களுக்கு செல்வார்கள் என அதிகாரிகள் எதிர்ப்பார்த்துள்ளார்கள்.

Read more...

பாடசாலை இடம்பெறும் காலப்பகுதியில் பிரத்தியே வகுப்புகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

வார நாட்களில்  காலை 7.30 முதல் பகல் 1.30 வரையிலான காலப்பகுதியில் தனியார் வகுப்புக்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் சமர்க்கப்படவுள்ளது. கடந்த காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்காக 80 சதவீத பாடசாலை வரவு கட்டாயமாக்கப்படவில்லை என்றும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் அவர் கருத்து வெளியிட்டார்.

காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை துறைசார் அதிகாரிகள் வழங்குவார்கள் என அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளிப்பு

 

அமைச்சர் மங்கள சமரவீர நேற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்அங்கு 389 நாட்களாகபோராட்டம் நடத்தி வரும் பெண்கள் குழுவினரை அவர் சந்தித்துள்ளார்.

காணாமல் போன தமது பிள்ளைகள் தொடர்பான தகவல்களை கோரியே அவர்கள் போராட்டம் நடத்திவந்துள்ளனர்முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தும் அதன் அதிகாரிகள் இந்ததகவல்களை திரட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவார்கள் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

காணாமல் போனோர் தொடர்பில் விசேட விசாரணை ஒன்று நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்இந்த விசாரணைகளில் எதுவித அரசியல் தலையீடுகளோ அல்லது இராணுவ  தலையீடுகளோ இருக்கமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்

2017 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஒன்பதினாயிரத்து 960 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளார்கள். -அகில இலங்கை ரீதியில் 6 மாணவர்கள் முதல் இடத்திற்கு தெரிவாகியுள்ளார்கள்.

கல்விப்பொதுத்தரதர சாதாரண தரப் பரீட்சையில் இம்முறை ஒன்பது ஆயிரத்து 960 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்திபெற்றுள்ளார்கள் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை எண்ணாயிரத்து 24 ஆக காணப்பட்டது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கணித பாடத்தில் சித்தியடைந்தோரின் எண்ணிக்கை இம்முறை 4 சதவீதத்தால் அதிகரித்திருக்கிறது. இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 67 சதவீதமானோர் கணித பாடத்தில் சித்தியடைந்துள்ளார். உயர்தரத்தை கற்பதற்கு கூடுதலான மாணவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது உயர்தரத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 73 சதவீதத்தை தாண்டுகிறது. கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மீளத்திருத்துவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பாடசாலை மூலமான பரீட்சார்த்திகள் அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம். தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய 6 மாணவர்கள் தேசிய மட்டத்தில் முதல் இடம்பெற்றுள்ளார்கள். கம்பஹா – ரத்னாவலி கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவியர்களும் இதில் இடம்பெற்றுள்ளார்கள். அகில இலங்கை ரீதியில் 9 மாணவர்கள் சாதாரண தரப்பரீட்சையில் இரண்டாவது இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இதில் 7 பேர் மாணவிகளாவர். அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூல சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவியாகக் யாழ்ப்பாணம் வேம்படி உயர்தர மகளிர் கல்லூரியின் மிருணி சுரேஷ்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி