Sri Lanka Brodcasting Corporation

Sun04222018

Last updateFri, 20 Apr 2018 7pm

வணிக

பண்டிகைக் காலத்தில் பொருட்களை கொள்வனவு செய்வோருக்கு விசேட அறிவித்தல்

பண்டிகைக் காலத்தில் பொருட்களை கொள்வனவு செய்கையில் கவனம் தேவை என நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பொருட்களின் பட்டியலை கொண்டு செல்வதன் மூலம் வர்த்தக மோசடிகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் சமந்தா கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலை மட்டங்களை அறிந்து அவற்றை கொள்வனவு செய்வதும், பற்றுச்சீட்டை வாங்குவதும் கட்டாயமானது. உணவுப் பொருட்களை வாங்குகையில் உற்பத்தித் திகதி, எடை முதலான விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என திருமதி கருணாரட்ன தெரிவித்தார்.

வர்த்தக மோசடிகள் பற்றி தொலைபேசி வாயிலாக முறையிடலாம். அழைக்க வேண்டிய இலக்கம் 1977 என்பதாகும்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி