Sri Lanka Brodcasting Corporation

Mon02192018

Last updateMon, 19 Feb 2018 1pm

வணிக

கடந்தாண்டு இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் சாதனை படைக்கும் அளவிலான வளர்ச்சி

கடந்தாண்டு இலங்கையின் வணிக ஏற்றுமதி துறையில் ஆகக் கூடுதலான வருமானம் பதிவு செய்யப்பட்டதாக அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வணிக அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்தாண்டு ஏற்றுமதி வருமானம் ஆயிரத்து 500 கோடி டொலராகும். தேயிலை ஏற்றுமதி வருமானம் 20 சதவீதத்தாலும், கடற்றொழில் உற்பத்தி ஏற்றுமதி வருமானம் 40 சதவீதத்தாலும் அதிகரித்திருந்தது.

குறிப்பாக ஈரான் முதலான மத்திய கிழக்கு நாடுகளுக்கு கூடுதலான தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டதால் ஏற்றுமதி வரி வருமானம் உயர்ந்தது. ஐரோப்பிய ஒன்றியம் மீன்பிடி ஏற்றுமதி தடையை நீக்கியதாலும், ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் கிடைத்தமையினாலும் கடற்றொழில் ஏற்றுமதி அதிகரித்தது.

அதேவேளை, இலங்கையும் சிங்கப்பூரும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. சீனா, இந்தியா ஆகிய நாடுகளுடன் வணிக உடன்படிக்கைகளை ஏற்றுபடுத்துவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மலிக் சமரவிக்கரம மேலும் தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டளவில் இரண்டாயிரத்து 200 கோடி அமெரிக்க டொலரை ஏற்றுமதி வருமானமாக பெறுவது அரசாங்கத்தின் இலக்கென அவர் கூறினார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி