Sri Lanka Brodcasting Corporation

Mon02192018

Last updateMon, 19 Feb 2018 1pm

வணிக

சிங்கப்பூருக்கும், இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவிருக்கின்றன - இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தமும் கைச்சாத்து.

இலங்கைக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக முதலீட்டு உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ ஷீ லுங் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற செயலமர்வில் அவர் கருத்து வெளியிட்டார்.

இருதரப்பு வர்த்தக நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் நோக்கில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமும் இதன் போது கைச்சாத்திடப்பட்டது. புதிய ஒப்பந்தத்தின் மூலம் இரண்டு நாடுகளுக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என அவர் கூறினார். இலங்கையின் தொழிற்பயிற்சி, தொழில்வாய்ப்பு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி போன்ற துறைகளுக்கு சிங்கப்பூர் உதவவிருக்கிறது. இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழின்முயற்சி சார்ந்த முதலீடுகள் பாரியளவில் அதிகரித்துள்ளன. இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக சிங்கப்பூர் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சிங்கப்பூர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

சுகாதாரம், சுற்றுலா, இணையத்தளத்தின் ஊடான வர்த்தகம், வலுசக்தி, உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி, பொருளாதார ஒத்துழைப்புக்களை முன்னெடுப்பது தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தினார்கள். திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த சிங்கப்பூர் வழங்கும் உதவிகளை அவர் பாராட்டி பேசினார்.

இலங்கையர்களுக்கு மேலும் சிங்கப்பூரில் தொழில் வாய்ப்புக்களை வழங்குவது பற்றி கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி சிங்கப்பூர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். ஆசியான் அமைப்புடன் மேலும் நெருங்கி செயற்படுவது இலங்கையின் எதிர்ப்பார்ப்பாகும். இதனால், ஆசியான் அமைப்பின் கலந்துரையாடல் ரீதியான பங்குதாரர்களை இலங்கையில் இணைத்துக் கொள்ள ஒத்துழைப்பு வழங்குமாறும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார். நல்லாட்சி இலக்குகளை அடைந்து கொள்வதற்காகவும், நல்லிணக்கத்திற்காகவும் இலங்கை ஆரம்பித்துள்ள வேலைத்திட்டங்கள் பற்றியும் ஜனாதிபதி விளக்கம் அளித்தார்.

உள்ளூர் செய்திகள்

 

வெளிநாட்டு செய்தி